ஒரே ஒருமுறை நான் பார்த்திருக்கிறேன். ஜாலி மனிதர். கதாநாயகனைப் போன்றதொரு தோற்றம். பலமுறை போனில் பேசியிருக்கிறோம். ரசிக்கவைக்கும்படியாக இருக்கும் அவரது பேச்சுக்கள். தல'யின் உற்ற நண்பர்,
ஆற்றங்கரை கவிதை மூலமாக நான் அவருக்குள் ஒளிந்திருக்கும் அழகிய கவிஞனைக் கண்டுகொண்டேன். ஒரு மெல்லிய கோட்டினில் பயணிக்கும் எறும்பைப் போல தடம் என்ற வலி ஏற்படுத்தாது அழகாக எழுதத் தெரியும் இவருக்கு... இன்னும் பல கவிதைகள் வரைந்திருக்கலாம்.. மன்மி!!!
சிரிப்புகள் பகுதியில் அதிகம் பதித்தவர். ரசனை மிகுந்த கதைகள், ரசிக்க வைக்கும் பின்னூட்டங்கள், என, வாழ்க்கையை ரசனைக் காட்டாக்கி, அதனுள் உறங்குகிறார். மன்றத்தின் வளர்ச்சியில் இவருக்கு பெரும் பங்கு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
மன்மி என்றாலே நினைவுக்கு வருவது ரசனை மிகுந்த சிரிப்பு மட்டுமே!