அன்பின் தோழர்களுக்கு என் வணக்கம். இந்த மன்ற நதியில் கலக்க வந்துள்ள புதியவன்.உங்கள் அரவணைப்புடன் முன்னேரிச் செல்ல துணை நிற்க வேண்டும். நன்றி.,என்றென்றும் அன்புடன்.Mayuran:medium-smiley-065:
ஓவியமாய், நேர்த்தியாய் நெருக்கி கட்டிய மாலையாய், கலைத்து போட்ட அந்தி வானமாய், தூரி குளிவிக்கிற மழையாய், சில பொழுதுகளில் தூறி வெப்பம் கூட்டுகிற மழையாய், பசுமணம் சுமந்து வரும் வயல்வெளிக் கற்றாய், இப்படி எல்லா வகை எல்லா தள கவிதைகளையும் படைக்க வல்லவர்.. படைப்பிலக்கிய உலகில் தனக்கொரு சிறப்பிடத்தை அடையப்போகிறவர்..
மன்றத்தினை பல்மடங்கு மெருகூட்டுவதற்கான பல திட்டங்களை தன்னகத்தே வைத்திருப்பவர். "நான் சொல்லிக் கேட்பாங்களா?" என்ற ஓர் போக்கு இருப்பதை அவதானித்தேன்.
கொஞ்சம் வேலை மிகுந்தவர். பொதுவாக நமது பணியெல்லாம் பகலோடு முடிந்துவிடும். அதுவும் வேலைத்தளத்தோடு. ஆனால் இவர் இரவிலும் வீட்டில் தொடர்ந்து செய்வபர். அதனாலோ என்னவோ தெரியவில்லை, மன்றத்தில் இப்போதெல்லாம் அதிகம் காணக்கிடைப்பதில்லை.
இதுவரை காலத்தில் எனக்கு கிடைத்த பெரிய கொடை ஒன்றே ஒன்றுதான். என்னோடு பழகுபவர்கள் எல்லாருமே உன்னதமான இடத்திலிருப்பவர்கள்ள். அதில் ஆதவனும் ஒருவர்.
ஆளை பார்த்தா அமைதியா இருப்பார்.. இவர் உள்ளே ஒரு எரிமலை எப்பவும் உறங்கி கொண்டே இருக்கும். அது கதை/கவிதை வடிவில் அவ்வப்போது வெளி வந்து அனைவரையும் கவரும்..
முதல் சந்திப்பை இவரால் மறக்க முடியாது.. சிரித்து ..சிரித்து...!!
வாழ்வில் பல சிகரங்களை இவர் தொடுவார்.. காத்திருக்கிறேன்..
பழகுவதற்கு இனிமையான பாசமிகு நண்பர்... இல்லையென்றால் என் அன்புத்தம்பி ஆதவன்! நான் நேரில் பார்த்த மன்ற சொந்தங்களில் ஒருவர். இனிமையானவர். கவிதாரசம் உள்ளவர், சிறந்த கதாசிரியர், இவரை நான் பார்த்ததே தனது கதைக்கான விருது வாங்க வந்த போதுதான்........
வாழ்க்கைப்பாதையில் இன்னும் பலபடிகள் தாண்டி நாமெல்லாம் அன்னார்ந்துபார்க்கும் படி வளர வாழ்த்துகின்றேன்
இவர் செய்ததை சொல்வதை காட்டிலும் செய்யாதை சொல்வது சுலபம். எல்லா தட்டிலும் நின்று விளையாடி தன்னையும் தட்டில் உள்ளவர்களையும் நிலை நிறுத்தியவர். மன்றத்தில் என் குரல் தொட்ட சிலரில் ஒருவர். நேரில் கண்டு கட்டி முத்தம் கொடுக்க நான் ஆசைப்படும் ஆட்களில் இவரும் ஒருவர். மன்றத்தில் இவர்.. சொல்லத் தேவை இல்லை.. அனைத்தும் சொல்லும் மன்றச்சுவர்.
மன்றத்தில் சகல கலா வல்லவராக திரியும் ஆதவா... கவிதையில் இவர் விமர்சனத்தை ரசிக்கவே ஒரு கூட்டம் உண்டு. இளம் வயதில் மன்றத்தில் பொறுப்பெடுத்து சிறப்பாக நடத்தியவர். நந்தவனத்தில் பங்கு ஒவ்வொன்றும் இன்றியமையாதது.
மன்ற நந்தவனம் பூத்துக்குலுங்குவதில் முக்கிய பங்கு வகிப்பவர்; அன்றாடப்பணிகளுக்கு இடையிலும், மன்றத்திற்காக தன் நேரத்தை ஒதுக்கியவர்; விரைவில் நல்ல இணையத்தொடர்பு கிடைத்து, கவிதைகளை, ஓவியங்களை தொடரவும், விமர்சனப்பணிகளை மீண்டும் முழு வீச்சில் தொடரவும் வாழ்த்து.