மணியா சொன்னதைப்போல உண்மையிலேயே ஒரு அதிசயப்பிறவி எங்கள் இளசு. என்ன இல்லை இவரிடத்தில்? ஆழ்ந்த தமிழறிவு, விஞ்ஞான, மெய்ஞான அறிவுடன், வாசிப்பவரையெல்லாம் வசியம் செய்யும் தேனெழுத்துக்குச் சொந்தக்காரர். இவரின் பின்னூட்டமென்பதை, படைப்புக்கு கிடைத்த உச்சக்கட்ட அங்கீகரிப்பாக நினைக்க வைக்கும் அன்பு மனசுக்காரர். என் நன்பர் என சொல்லிக்கொள்வதில் இமாலய மகிழ்ச்சி. வாழ்நாளில் ஒரு முறையேனும் சந்திக்க வேண்டுமென தவிக்க வைப்பவர்.