தாமரை

Profile posts Latest activity Postings About

  • வணக்கம். வெகு நாட்களாக, தங்களது பின்னூட்டங்கள் இல்லாமல், வெற்றிடமாக இருக்கிறது.
    வேலைப் பளு காரணமோ ?
    புத்தாண்டில் உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
    வளமான, நலமான,ஒளிமயமான, புத்தாண்டு வாழ்த்துக்கள் !
    கலக்கலான தகவல்களுக்கு - நம்ம தாமரைதானுங்க..

    வாழ்த்துக்கள்
    இவை வெறும் வார்த்தைகள் அல்ல..

    நட்புடன்-மஸாகி
    27082009
    தாமரை...ஒரு பல்கலைக்கழகம். பன்முகக் கலைஞன். வியந்து பார்க்கவைக்கும் அதிசய மனிதர். நிர்வாக மேலாண்மையும், மொழியாளுமையும் ஒருங்கே இணைந்த அசரவைக்கும் கலவை. இவர் எழுத்துக்கள் எல்லாமே ஏதோ ஒன்றை நம்மிடம் நட்டுவிட்டுச் செல்லும், நகைச்சுவை, பண்சுவை, பாடங்கள்....எல்லாமுமே...
    தாமரை..

    மன்றத்தில் புதுமைச் செயலி. ஒரு மனிதரால் எத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும்? ஒருமனிதரால் எப்படி அத்தனை விசயங்களை ஞாபகப்படுத்த இயலும்? ஒருவரால் எப்படி பல்வேறு அம்சங்களை ஒன்றாகக் கலக்கி வெளிப்படுத்த முடியும்?

    தாமரையால் முடியும்..

    அதிசயவைக்கும் மொழி ஆளுமை, மொழி ஆராய்வு, பல்வேறு தளங்களை எட்டும் கவிதைகள், ரசிக்கவைக்கும் அனுபவகக்கட்டுரைகள், பதிலடிகள், பதில்கவிதைகள், எதிர்கவிதைகள், என இவரது திறமைகள் எதனை விடுக்க, எதனை தொடுக்க மின்னிதழ்களை திறம்பட நடத்தும் சிறந்த ஆசிரியர், திட்டமிடலும், கணக்கியலும் ஒருங்கே வாய்த்தவர், அறிவுவும், அறிவுரையும் மிகுந்தவர்..

    பேச்சில் ஆளுமை மிகுந்தாலும் பழக்கத்தில் எளிமையானவர், நம்மால் தெளிவாக ஒரு முடிவு எடுக்க முடியாவிடில் தாமரைக்கு அழைத்து அதன் தீர்வைப் பெறலாம்.

    தாமரை பதில்கள் என்ற திரி வார இதழ்களில் வெளிவரும் கேள்வி-பதில்களின் தரத்தை விட பன்மடங்கு உயர்ந்தது.. உண்மை,, வெறும் புகழ்ச்சியில்லை.

    மன்றத்தின் தூண்கள் பலர் இருந்தாலும் மன்றத்தின் தரத்தை உயர்த்திக் கொண்டிருக்கும் மிகச்சிலருள் இவர் தலையானவர்..
    நமக்கு தேவையான விசயங்களை கூகுள் , தாமரை , மற்றும் விக்கிப்பீடியாவில் இருந்து பெற்றுக்கொள்ளாலாம் ...
    :) :) :)
    நான் அண்ணனிடம் கற்றது கையளவு கற்கவேண்டியது கடலளவு.. மன்ற துரோணர்களின் துரோணர்..
    அதிசயக்க வைக்கும் பல திறமைகள், பண்புகள் ஒருங்கே குவிந்த சுரங்கம்.
    அறிவாற்றல், மொழியாளுமை, கருத்தைப் பரிமாறும் தெளிவு, திட்டமிடல், மன/மனித மேலாண்மை, பாசமூட்டிப் பழகும் தன்மை - மன்றத்தின் ''தலைமைச் செயலகம்'' எனலாம் நம் தாமரையை.
    அறிவுச் சுரங்கம். பல் கலை வித்தகர். மெளன மொழி அறிந்த மாபெரும் படைப்பாளி. தமிழின் பல பரிமாணங்களை அனாயாசமாக அள்ளித்தரும் அன்புச் சகோதரர். மேலும் பல படைப்புகளைத் தர வேண்டிக் கொள்கிறேன். சொற்சிலம்பாடும் சுந்தர எழுத்து இவருடைய தனித்தன்மை. பணி சிறக்க வாழ்த்துக்கள்
    எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு
    அந்தக் கேள்வியாகவே வந்து
    அவரா இவர் என்று யோசிக்க வைத்து
    விடையை அடையாளம் காட்டிச் செல்பவர்..

    இவரைப் பற்றி அறிவதானால்
    மன்றத்திலும் அவர் மனதோரத்திலாவதும்
    வாழ்ந்தால்த்தான் முடியும்-என்
    மையலில் பங்கு பறித்த தமையன்.
    இத்தனை விசயங்களை தெரிந்து வைத்திருக்க ஒருவரால் முடியுமா? இத்தனை ஞாபகசக்தியுடன் ஒருவரால் இருக்க முடியுமா? என வியக்க வைத்த விந்தை மனிதர். சொற்களை வைத்து சிலம்பம் நடத்திக் காட்டியவர். சந்தேகம் என்று எந்த நேரத்தில் சென்றாலும் தீர்த்துவைப்பதோடு விளக்கமளித்து ஊக்கப் படுத்துபவர்.
    அன்பு அண்ணன்.
    சிறந்த தமிழ் ஆசான், கவிஞர்.. எழுத்தாளர்.. எந்த துறை பற்றி வேண்டுமானாலும் இவரிடன் கருத்து கேட்கலாம். தீர்க்கமான சிந்தனையை ஒவ்வொரு துறை பற்றியும் தெளிவாக வைத்திருப்பவர்.

    சரியான வழிகாட்டி..!!
    எங்களின் அன்பான அண்ணா. :)
    சிறந்த படைப்பாளர், தொகுப்பாளர், ஆசிரியர், கவிஞர்... என பலப்பட்டங்களுக்கு சொந்தக்காரர். மன்றத்தில் தாமரையின் பங்களிப்புகள் வியக்க வைக்கிறது. அவரது சேவை, ஆலோசனை மன்றத்துக்கு தொடர்ந்து தேவை...
    பன்முக கவிஞர்!!! சிறந்த திட்டமிடல் ஆசிரியர்!! என்றும் உங்கள் பங்களிப்பு மன்றத்தில் வேண்டும் இனிய நண்பரே.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top